நடிகர் விவேக் சில வருடங்களுக்கு முன் கரு கரு முடியுடன் இளமையாக பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். ரஜினிகாந்துடன் நடித்தபோது கூட கரு கரு ஹேர்ஸ்டைலுடன் தான் நடித்தார்.
சில வருடங்களாக அவர் நடித்து வரும் படங்களில் அஜீத் போல ஹேர்ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இன்னும் இயல்பாக வீட்டில் இருப்பது போன்ற லுக்குகளுடன் நடித்து வருகிறார்.
அவர் நடித்த வெள்ளைப்பூக்கள் படத்தில் கூட ஒரு பையனுக்கு தகப்பன் என்ற அடிப்படையில் வெள்ளை முடியுடன் தான் நடித்தார்.
இந்த வெள்ளை முடி ஸ்டைலையே அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்ட விவேக் இப்போது அந்த ஸ்டைலிலிலேயே அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
சமீபத்தில் தன் அசத்தலான ஸ்டைலான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள விவேக் இந்த புகைப்படத்திற்கு காரணம் காஸ்ட்யூம் ஸ்டைலிஸ்ட் சத்யாதான் என கூறியுள்ளார்.
என் சமீபத்திய போட்டோ ஷூட் திரையுலகாலும் பிறராலும் பாராட்டப் படுகிறது. அதற்கு முழு காரணம் costume stylist @NjSatz சத்யாவும் அவர் குழுவும் தான்.thank u my dear young team!! pic.twitter.com/EfKqWWBEse
— Vivekh actor (@Actor_Vivek) October 28, 2020