---Advertisement---

விவேக்கின் உடலுக்கு நெருங்கிய நண்பர் சார்லி அஞ்சலி

Published on: April 17, 2021
---Advertisement---

இன்று மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு விவேக்கின் நெருங்கிய நண்பர் சார்லி அஞ்சலி செலுத்தினார். அந்தக்காலங்களில் இருந்து விவேக்குடன் பல படங்களில் நடித்தவர் சார்லி.

காலமெல்லாம் காதல் வாழ்க தொடங்கி வெள்ளைப்பூக்கள் வரை பல்வேறு படங்களில் நடித்த சார்லியும் விவேக்கும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.

ஆம் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சார்ந்தவர்கள் ஆவர். இன்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சார்லி, மரம் இருக்கும் வரை, மண் இருக்கும் வரை என் நண்பன் விவேக் பெயர் நிலைத்திருக்கும் என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.