கடந்த சில வருடங்களாக விருச்சிகராசிக்காரர்கள் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. கடந்த 2012 ல் இவர்களை பிடித்த சனீஸ்வர பகவான். இவர்களுக்கு சொல்ல முடியாத சோதனைகளை கொடுத்து விட்டார் என்றே சொல்லலாம்.
ஏற்கனவே இவர்கள் ரணமான நெருப்புக்கிரகமான செவ்வாய் வீட்டை சேர்ந்தவர்கள். அந்த செவ்வாய் வீட்டில் சனி பகவான் செய்த வேலைகள் அவர்களை மேலும் ரணமாக்கியது. மனைவியுடன் சண்டை, அப்பா அம்மாவுடன் சண்டை, செய்தொழில் நஷ்டம், திருமணத்தடை, குழந்தையின்மை என பலருக்கும் பல பிரச்சினை இது போல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விருச்சிகராசிக்கார்களின் வாழ்வில் இந்த ஏழரை வருடத்தில் நிம்மதியே இல்லை எனலாம். ஒரு சிலருக்கு அவர்கள் சுயஜாதக வலிமையை பொறுத்து சுமாரான பலன்கள் நடந்திருக்கலாம் ஆனால் பெரும்பாலான விருச்சிக ராசிக்காரகள் நல்லவற்றை கடந்த சில வருடங்களாக அனுபவிக்கவில்லை என இவர்களை கூறலாம். இவர்களை ஒரு வழி ஆக்கி படுத்தி எடுத்து விட்டது என கூறலாம்.
சனீஸ்வரன் பிடித்தால் மற்ற ராசிக்காரர்கள் பட்ட கஷ்டத்தை விட இவர்கள் ஒரு படி அதிகம் துன்பப்பட்டிருப்பார்கள்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜென்மச்சனி கழிந்து பாதச்சனியாக இவர் அமர்ந்து விட்டார்.இருப்பினும் சின்ன சின்ன கஷ்டங்களையும் பெரிய காரியத்தடைகளையும் இவர் கொடுத்து வருகிறார்.
வரும் டிசம்பர் 2020ல் டிசம்பர் 27ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியோடு விருச்சிகராசிக்காரர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது.
அன்று ஜென்மச்சனியாக தனுசு ராசியில் இருந்து வரும் சனி பகவான் மகர ராசிக்கு மாறுகிறார்.







