---Advertisement---

விஜய் டிவி மகேஷ், நிஷாவை வச்சு செய்த சமூகவலைதளவாசிகள்

Published on: September 6, 2021
---Advertisement---

ஸ்டார் கிட்ஸ் என்று விஜய் டிவியில் ஒரு ஷோ அதில் வந்த ஒரு ப்ரமோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் இரண்டு நாட்களாக விஜய் டிவியை தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மகேஷ் மற்றும் நிஷாவை தொடர்ந்து ட்ரோல் செய்கின்றனர்.

காரணம் சிம்பிள்தான் இந்த கிட்ஸ் ஷோவில் இவர்கள் தங்கள் குழந்தையை பிரிந்து ஷூட்டிங் போன்றவைகளில் கலந்து கொள்கிறார்களாம் அதனால் தங்கள் குடும்பத்தை மிஸ் செய்கிறார்களாம். இதை அழுதுகொண்டே மகேசும், நிஷாவும் சொல்ல இதை ரசிகர்கள் காமெடியாக்கி விட்டனர்.

அப்போ நாங்க எல்லாம் குழந்தைய மிஸ் பண்ணாமயா இருக்கோம் நாங்களும் வேலைக்குத்தான் போறோம் என ஒரு சிலரும், வெளிநாட்டில் இருக்கும் சிலர் அப்போ எங்களை எல்லாம் என்ன சொல்வது கிடைக்கும் சொற்ப காசுக்காக நாங்க எல்லாம் மனைவி குழந்தைகள், ஊர் உறவை மறந்து சோகத்தோடும் இருக்கோம் அப்போ நாங்க யாரு என மகேஷ் போன்றவர்களை வறுத்து எடுத்து வருகின்றனர்.

மேலும் இது போல போலியான விசயங்களை கூறாதீர்கள் என விஜய் டிவிக்கு கடும் கண்டனமும் எழுந்து வருகிறது.

இது சம்பந்தமாக அதிகமான மீம்களை போட்டு ரசிகர்கள் வெறுப்பேற்றி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க