---Advertisement---

அஜீத் பெயரை பறிக்க துடிக்கும் சூர்யா?… சம்மதம் சொல்லி பப்ளிசிட்டி கொடுத்த விஜய்!…

Published on: June 17, 2024
vijaysethupathi
---Advertisement---

விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் இப்போது உள்ள அடுத்த தலைமுறை கதாநாயகர்களில் ரொம்ப ரொம்ப முக்கியமானவர். கடந்த வாரம் வெளியான இவரின் 50வது படமான “மகாராஜா” சக்கை போடு போட்டு வருகிறது. இவரது நடிப்பே அதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

விஜய்சேதிபதி நடித்த “சேதுபதி” படத்தின் அவரின் சிறு வயது கதாப்பாத்திரத்தை செய்திருந்தவர் சூர்யா. இவர் வேறு யாரும் கிடையாது விஜய்சேதுபதியின் மகனே தான்.

வில்லன், கெஸ்ட் ரோல். ஹீரோ என விஜய்சேதுபதி வரிசை கட்டி நடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவரது மகன் சூர்யாவும் கதாநாயகனாக நடிக்க வந்து விட்டார். ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ அனல் அரசு இயக்கியுள்ள ஆக்சன் படத்தில் நடித்திருக்கிறார்.

“ஃபீனிக்ஸ் வீழான்” படம் தான் அது. இதன் டீஸர் நேற்று வெளியானது . மகனின் முயற்சியை பாராட்டி விஜய்சேதுபதி படத்தின் டீஸர் போட்டோவை அவரது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டு மகன் படத்திற்கு சைலென்டாக ஒரு பப்ளிசிட்டியை தேடி கொடுத்துள்ளார்.

vijay sethupathi surya
vijay sethupathi surya                                                                                                முதல் படத்திலேயே ஆக்சன் சப்ஜெக்டை கையில் எடுத்துள்ள சூர்யா தனது அப்பாவுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என சொல்லி விட்டார்.

தொடர் தோல்விகளைன் பார்த்து அதிலெல்லாம் இருந்து மீண்டு வந்ததனால் அஜீத்குமாரை திரை வட்டாரத்தில் ஃபீனிக்ஸ் பறவை போன்றவர் என சொல்லி வந்தார்கள் சில வருடங்களுக்கு முன்னர் வரை.

இவ்வளவு ஏன் அஜீத்தே கூட தனது “அட்டகாசம்” படத்தில் எரிந்து போன சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் ஃபீனிக்ஸ் போல மீண்டும், மீண்டும் பறப்பேன் என பாடியிருப்பார்.

அப்படி தமிழ் சினிமாவில் ஃபேமஸான பெயரை தனது முதல் படத்தின் பெயராக பெற்றுள்ள சூர்யா அவரது அப்பாவை போலவே சிறந்த நடிகராக வரவேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!