---Advertisement---

மாப்பு போதும் ஸ்டாப்பு…வடிவேல் ஸ்டைலில் சம்பளத்திற்கு முற்று புள்ளி வைத்த விஜய்சேதுபதி!…

Published on: June 21, 2024
vijaysethupathi
---Advertisement---

“மகாராஜா” படத்தினுடைய வெற்றி விஜய்சேதுபதியை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இருக்காதா பின்ன. கடந்த அஞ்சு வருசமா ஹீரோவா நடிச்ச படங்கள் எதுவுமே பெருசா எடுபடலையே. வில்லன், கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டும் தான் கை கொடுத்துட்டு வந்தது.

“மகாராஜா” தந்தை – மகள் பாசத்தை வைத்து வந்திருக்கும் படம். எதிர்பார்த்ததை விட நிதிலன் சுவாமிநாதனின் டைரக்சன் சூப்பரா இருந்தது. இது வரை தமிழ் நாட்டுல மட்டும் படம் முப்பத்தி ஏழு கோடி ரூபாய் வரை கலக்சன் பண்ணியிருக்காம். குறைஞ்ச பட்ஜெட்ல எடுக்கப்பட்ட படமான “மகாராஜா”வின் வசூல் வாயை பிளக்க வைச்சிடிச்சாம்.

pandiyaraj vijaysethupathi
pandiyaraj vijaysethupathi

இப்போ விஜய்சேதுபதிய புக் பண்ணியிருப்பது சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தானாம். “பசங்க” படம் எடுத்த பாண்டியராஜ் தான் படத்தை இயக்கப்போகின்றார் என செய்தி வந்திருக்கு.

விரைவில் முறையான அறிவிப்பும் வர காத்திருக்குது. எல்லா ஹீரோக்களும் படம் ஹிட் ஆனதும் தங்களோட அடுத்த படத்தோட சம்பளத்தை ஏத்தி விடுவாங்க. இது தானே உலக வழக்கம்னு சொல்லத்தோனலாம்.

ஆனால் இந்த தடவை விஜய்சேதுபதி டிஃபென்ஸ் மோடுக்கு போயிட்டாரு. பதினெட்டு கோடி, பதினஞ்சு கோடின்னு இதுக்கு முன்னால சம்பளம் கேட்டுக்கிட்டு இருந்தவர் மாப்பு போதும் ஸ்டாப்புன்னு வடிவேல் ஸ்டைல்ல தனக்குத்தானே சொல்லிக்கிட்டு  பத்து கோடியே போதும்னு  சொல்லிட்டாராம். இந்த தகவல விமர்சகர் ‘வலைப்பேச்சு’அந்தணன் சொல்லியிருக்குறாரே.

இந்த விஷயத்த ப்ரொடியூசர் ஒவ்வொரு மேடைலயும் சொல்லனும் . அப்ப தான் ஹிட் படம் கொடுத்ததும் தங்களோட சம்பளத்தை இஷ்டத்துக்கு ஏத்தாம, விஜய் சேதுபதி மாதிரி பண்ணுவாங்கன்னும் அந்தணன் சொன்னாரு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.