---Advertisement---

விஜய் சங்கவியின் பாடல் கவர்ச்சியாக மட்டுமே ரசிகர்களை கவர்ந்ததா

Published on: September 17, 2025
---Advertisement---

நடிகர் விஜய்  நடித்த முதல் திரைப்படம் நாளைய தீர்ப்பு, அவரது தந்தை இயக்கத்தில் வந்த இந்த படத்தில் கவர்ச்சி மற்றும் ஆக்சன் காட்சிகள்தான் இருக்கும். எஸ்.ஏ சந்திரசேகரின் பழைய படங்களில் கவர்ச்சி ஆக்சன் காட்சிகள் மற்றும் கோர்ட் காட்சிகள் அதிகம் வைத்திருப்பார், அதையே தனது மகன் படங்களுக்கும் ஃபாலோ செய்தார்.

அதிலும் சங்கவி, ஸ்வாதி , யுவராணி போன்றோர் விஜயின் ஆரம்ப கால படங்களில் நடித்து ரசிகர்கள் உள்ளம் கவர்ந்தனர், அதில் இவர்கள் வெளிப்படுத்திய கவர்ச்சி படம் வெற்றி பெற்ற முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.

 

அதில் சங்கவியின் கவர்ச்சி உச்ச பட்சத்தில் இருந்தது. இவரின் எல்லா பாடல்களும் க்ளாமராக இருந்தாலும் கேட்க மென் மெல்லிய மெலடி பாடல்களாகவும் இருந்தது. குறிப்பாக சில்லென சில்லென நீர்த்துளி பட்டு, ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும், சிங்கார கண்ணுக்கு மை கொண்டு போன்ற பாடல்களை சொல்லலாம். அதிலும் சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா பாடலில் எல்லாம் அருண்மொழி உருகி இருப்பார். இப்படி சங்கவி உடனான கவர்ச்சி பாடல் மட்டுமல்ல, அவருடன் நடித்த பாடல் காட்சிகள் கேட்பதற்கும் நன்றாக இருந்தன, இதுவும் விஜயின் படங்கள் வெற்றி பெற முக்கிய காரணம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.