---Advertisement---

நீ எவ்வளவு சம்பாதிச்சாலும் நடுரோட்ல தான் நிக்கணும்!…ஜோதிடர் மூர்த்திக்கே ஆருடம் சொன்ன குருநாதர்…

Published on: May 12, 2024
vennira aadai moorthy
---Advertisement---

சினிமா என்றாலே இசை, கதை என ஒவ்வொரு அம்சமும்  முக்கியத்துவம் பெறத்தான் செய்யும். ரசிகர்கள் எது நடந்தால் திருப்தி அடைவார்கள். அவர்களின் ஆவல் எதனால் தூண்டப்படும் என்பதனை சரியாக தெரிந்து வைத்திருப்பவர்களே வெற்றியை தங்களது வசமாக்கி வீரநடை போட்டு வலம் வருவார்கள்.

நகைச்சுவை நடிகர்கள் என்றாலே சினிமாவில் முக்கியமானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களும் அந்த நிலையை அடைவதற்கு அவர்கள் எத்தனை கஷ்டங்களையோ கடந்து தான் வந்திருப்பார்கள்.

தமிழ் சினிமால் நடிக்க வருவதற்கு முன்னர் “வெண்ணிறஆடை” மூர்த்தி தன்னுடைய ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் சென்று ஆருடம் பார்த்துள்ளார். ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த ஜோசியரோ, நீ நடிகனாக மாறிவிடுவாய் என சொல்லியிருக்கிறார்.

venniraadai moorthy
vennira aadai moorthy

அவர் சொன்னபோல மூர்த்திக்கு “வெண்ணிற ஆடை”படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் அதே ஜோசியரை மீண்டும் சந்தித்து பலங்களை சொல்ல கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜோதிடரோ நீங்கள் வயதாகி, கைத்தடியின் உதவியோடு நடக்கும் காலம் வரை நீ சினிமாவில் தான் இருப்பீர்கள் என அடித்து சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதிலே நீங்கள் நிறைய சம்பாதிப்பீர்கள். ஆனால் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், அதையெல்லாம் இழந்து விட்டு நடுத்தெருவில்  நிற்கன்ற மாதிரித்தான் வருங்காலம் அமையும் என அழுத்தமாக சொல்லி இருக்கிறாராம்.

அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் ஜோதிடராகவும் வருவீர்கள் எனவும் சொல்லியிருக்கிறார். அதன் பெயரிலேயே  வெண்ணிறாடை மூர்த்தி தனக்கு ஆருடம் சொன்ன ஜோதிடருடைய புத்தகங்களை வாங்கி படித்து தான் ஜோதிடராக மாறியிருக்கிறார், ஜெயலலிதா போன்ற முக்கிய புள்ளிகளுக்கும் ஆருடம் சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!