---Advertisement---

அது அவங்க இஷ்டம்…நா என்ன ரைட்ஸா கேட்டேன்…வைரமுத்துவின் இந்த அட்டாக் யார் மீதோ?…

Published on: May 31, 2024
vairamuthu
---Advertisement---

கூலி படத்தில் தன்னை கேட்காமலே தான் இசையமைத்த டிஸ்கோ பாடலை பயன்படுத்தியது குறித்து சன் பிக்சர்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இதே போல தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் குனா பட பாடலை பயன்படுத்தியதற்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

வைரமுத்து சமீபத்தில் பேசிய சமயத்தில் தான் எழுதிய பாடல்களிலிருந்து தான் பல படங்களுக்கு பெயர் கிடைத்துள்ளது. உதாரணமாக சொன்னால் வின்னைத்தாண்டி வருவாயா தான் எழுதிய வென்னிலவே வின்னை தாண்டி வருவாயா தான்.

அதே போல திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு என தாஜ்மஹால் படத்தில் வந்த பாடல் வரிதான் விஜய் நடித்து பேரரசு இயக்கிய படத்திற்கு திருப்பாச்சி என பெயர் சூட்டப்பட்டது.

இதெற்கெல்லாம் நான் என்ன உரிமை கோரவா முடியும்?…ரைட்ஸ் கேட்க விடாமல் எனமீது கொண்ட அன்பினால் எனது வரிகளை பெயராக வைத்துள்ளனர். அதற்காக நான் என்ன கேள்வியா கேட்டேன். அது அவர்களின் பிரியம் என விட்டுவிட்டேன் என சொல்லியிருக்கிறார்.

vairamuthu ilayaraja
vairamuthu ilayaraja

 

வைரமுத்து இளையராஜா ஒரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்திருந்து வந்தவர்கள். இவர்கல் இருவரின் கூட்டணியில் வந்த பாடல்கள் தமிழ் நாட்டையே குலுங்க வைத்தது ஒரு காலத்தில். இவர்கள் இருவருக்கும் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக வெடித்தது மோதல்.  எப்படியாவது இருவரும் மீண்டும் இணைந்து விட மாட்டார்களா என ஏங்கி தவித்து வரும் இவர்களின் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்போதும்.

இவர்கள் இப்போது கீரியும் பாம்புமாகவே இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வைரமுத்து பேசியது ஜாடையாக யாரையும்   தாக்கி இருக்கின்றாரா? என குழம்ப வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.