---Advertisement---

சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? அதிரடி பேட்ஸ்மேனுக்கு தடை விதித்த வாரியம்!

By Sri
Published on: April 29, 2020
---Advertisement---

பாகிஸ்தானைச் சேர்ந்த உமர் அக்மல் மீதான சூதாட்ட புகாரால அவர் மூன்று ஆண்டுகள் எந்தவிதமான போட்டிகளிலும் விளையாட தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல்  ‘இந்தியாவுக்கு எதிரான இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதற்கு அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் பணம் கொடுக்க ஒரு தரப்பு முயன்றனர்’ எனக் கூறியிருந்தார். ஆனால் இந்த தகவலை ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அவர் சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது சர்வதேசக் கிரிக்கெட் விதிகளின் படி தவறானது.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் தரக்கோரி மார்ச் 31ம் தேதி வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் எந்த விளக்கமும் அளிக்காததால் அவருக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியை சேர்ந்த 29 வயதான உமர் அக்மல் தனது பேட்டிங் திறமைகளுக்காக பேசப்படுவது போலவே சர்ச்சைகளுக்காகவும் பேசப்படுவர். கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் இல்லாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் அவர் ஏற்கனவே பயிற்சியாளரிடம் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!