---Advertisement---

பைரோ போபியா நோயால் அவதிப்பட்ட கமல்ஹாசன் உல்லாச பறவைகள் திரைப்படம்

Published on: September 22, 2025
---Advertisement---

கடந்த 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் உல்லாச பறவைகள். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாகும். கமல்ஹாசன், ரதி,தீபா, சுருளிராஜன்  வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் படத்தில் நடித்திருந்தனர்.

 

படத்தின் கதைப்படி இந்த படத்தில் எங்காவது தீ எரிவதை பார்த்தாலே கமலஹாசன் சற்று மோசமான மனநிலைக்கு சென்று விடுவார். அது அவரை எரிச்சல் படுத்துவது போலவே இருக்கும். இது எதனால் என்று பார்க்கையில் அவருக்கு ஒரு பிளாஷ்பேக் வரும் கடந்த காலத்தில் அவர்  கிராமத்துப் பெண் தீபாவை காதலித்து வருகையில் அவரது மாமா ஒருவரால் அந்தப் பெண் தீ வைத்து எரித்து கொ.. செய்யப்படுவார். இதனால் இப்படி ஒரு நோயில் கமல்சிக்கிக் கொள்கிறார்.

 

இந்த நிலையில் அவரது நண்பர் ராஜுவாக வரும் சுருளிராஜன்  உதவியுடன் வெளிநாடு சென்று அதாவது பாரிஸ் சென்று சிகிச்சை செய்ய முடிவு செய்து அங்கு செல்கிறார்கள். அங்கு அவரின் இன்னொரு தோழி ரதியை சந்திக்கிறார் அவர் பாரிஸ் நகரை சுற்றி காண்பிக்கிறார், அவரின் மோசமான மனநிலையை மாற்றுகிறார்.

 

ஒரு கட்டத்தில் அந்த நோயிலிருந்து குணமாகி ஊர் திரும்பும் கமலஹாசனுக்கு அவரது மாமா ஒருவரால் இன்னொரு பிரச்சனை காத்திருக்கிறது அது சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை அதற்காக அவருடன் போராடி கமல் எப்படி வெல்கிறார்என்பதை இரண்டாம் பாதியில் சொல்லியிருந்தார்கள்

  1.  ஜெர்மனியின் செந்தேன் மலரே, நான் உந்தன் தாயாக வேண்டும், அழகு ஆயிரம் உலகம் முழுவதும் என எல்லா பாடல்களும் இளையராஜா பிரமாதமாக போட்டுக் கொடுத்திருந்தார். இந்த பாடல்கள் பாரிஸ் நகரில் படம்பிடிக்க பட்ட விதமும் அருமையாக இருக்கும்.  மேலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த தெய்வீக ராகம் என்ற பாடல் எப்போதுமே மிகப்பெரிய ஹிட் பாடல் என சொல்லலாம். சிவி ராஜேந்திரன் இப்படத்தை  இயக்கியிருந்தார்.

 

எங்கெங்கும் கண்டேனம்மா என்ற ஒரு வெண்ணிற ஆடை மூர்த்தி சுருளிராஜன், இணைந்து பாடும் ஒரு நகைச்சுவையான பாடல் ஒன்றும் படத்தில் மிகப் பிரபலமானது.

 

கமலஹாசனுக்கு நல்லதொரு பெயரை கொடுத்த அழகான திரைப்படம் இப்படம்.