---Advertisement---

வெள்ளித்திரையில் வாணிபோஜன்!…வித்தியாசம் காட்டும் விதார்த்!…ரனகளப்படுத்துவாரா ரகுமான்?…

Published on: May 29, 2024
vani bojan
---Advertisement---

சின்னத்திரை மெகா தொடர்கள், டி.வி. ஷோக்களினால் தமிழக ரசிகப்பெருமக்களிடையே பாப்புலர் ஆனவர் வாணி போஜன். தனது நளினமான நடிப்பினால் பலரையும் வசியம் செய்து  வைத்தது போல தன் வசம் இழுத்து வைத்திருப்பவர் இவர். சின்னத்திரை நயன் தாரா என இவர் அழைக்கப்படுவது அறிந்த ஒன்றே.

இப்போது வெள்ளித்திரையே நோக்கி நகர்ந்துள்ளது சின்னத்திரையில் இது நாள் வரை மையம் கொண்டிருந்த இந்த வாணி புயல். சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகியுள்ள “அஞ்சாமை” படத்தின் டிரையலர் வெளியிடப்பட்டது. கல்வியை மையமாகக்கொண்டே படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக சொல்கிறது படத்தின் டிரையலர்.

anjaamai
anjaamai

தெருக்கூத்து நடனக்ககலைஞராக நடிக்கிறார் போல விதார்த். தனது மகனிடம் இந்த காலத்ததுல நாம முன்னேறனும்னா அது படிப்பால மட்டும் தான் முடியும்னு சொல்லி வசனம் பேசுகிறார். அதே போல ரகுமான் இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். டிரையலரில் காட்டப்படும் காட்சிகள் நீட் தேர்வு குறித்தே வருகிறது. வழக்கறிஞர் ரகுமான் வாதாடும் காட்சிகளில் பேசும் வசனங்கள் படத்தின் கதைக்கருவை தெளிவாக சொல்லி விடுகிறது.

விதார்த் ஒரு வித்தியாசமான பாதையில் தமிழ் சினிமாவில் பயணிக்கத்துவங்கியுள்ளார் என்பது அவரது முந்தைய படங்களின் மூலம் தெரிய வந்தாலும், “அஞ்சாமை” படத்திலும் தனது திரைப்பயணத்தில் மேலும் ஒரு புதிய பாதையை தேர்வு செய்துள்ளார் என்பதுவும் தெளிவாக தெரிகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பிரஸ் ஷோவில் இம்ப்ரஸ் பண்ணின மகாராஜா!...மரண மாஸ் காட்டியிருக்காரே மக்கள் செல்வன்...

வாணி போஜனுக்கு சின்னத்திரை போல வெள்ளித்திரையும் அங்கீகாரம் கொடுக்குமா?. தொலைக்காட்சி கொடுத்த தனித்துவத்தை தக்க வைக்க உதவுமா திரைஅரங்கம் என்பது படம் வெளி வந்ததும் தெரிய வரும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!