திருவண்ணாமலை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மலை மீது அருட்சுடராய் எரியும் தீபத்தை பார்க்க காண கண் கோடி வேண்டும். இந்த வருடம் கொரோனாவால் பல பக்தர்கள் கலந்து கொள்ளாத நிலையில் மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்தாம் நாள் அன்று மாலையில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவது காலம் காலமாக நடைபெறுவது வழக்கம் .
அதற்காகவே கோயிலில் இருந்து மகாதீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும் .
பத்தாம் நாள் மாலையில் தீபம் ஏற்றிய பின்பு பதினோரு நாட்கள் தொடர்ந்து தீபம் எரியும் . அதன்பின் மீண்டும் கோயிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரப்படும் .
அதன்படி நேற்று 09.12.2020 இரவோடு தீபம் ஏற்றி முடிக்கப்பட்ட நிலையில் இன்று அண்ணாமலையார் ஆலயத்திற்கு மகாதீப கொப்பரை கொண்டு வரப்பட்டது .
எரிந்த கொப்பறையில் இருந்து மை எடுக்கப்பட்டு விரைவில் பக்தர்களுக்கு இதை பிரசாதமாக வழங்குவார்கள்.













