---Advertisement---

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் நடந்தா 28 ஆயிரம் தரேன்… டெஸ்லா நிறுவனத்தின் ஆஃபர்… எதுக்கு தெரியுமா…?

By Sri
Published on: August 20, 2024
---Advertisement---

தொழிலதிபரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் சிஇஓவாக இருந்து வருகின்றார். இந்த நிறுவனத்தில் பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் 7 மணி நேரம் நடப்பது தான் அந்த வேலை.

அதற்கு நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 28 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5.7 முதல் 5.11  வரை உயரம் உள்ள நபர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். வாகனங்கள் தயாரிப்பதை தவிர்த்து அதில் நவீன அறிவியல் சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்ட் ஆப் டெஸ்லா குழு ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில் மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெஸ்லா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விஷயங்களை செய்து பழகி வருகின்றது. அப்படி அந்த ரோபோட்களுக்கு மனிதர்களின் செயல்பாடுகளை சொல்லித் தருவதற்கு தான் இந்த வேலை. அதன்படி அசைவுகளை பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்சர் சூட் உடையும், விஆர் ஹெட்செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும்.

அப்படி நடக்கும் போது அந்த அசைவுகளை ரோபோக்களுக்கு கற்று தர முடியும். டெஸ்லா நிறுவனத் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் ஃபாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு தொடர்ந்து அப்ளிகேஷன்கள் குவிந்து வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.