ஐபோன் 18 ப்ரோ குறித்த லீக்ஸ் தகவல்கள் இப்போதே இணையதளங்களை அதிரவைக்கத் தொடங்கிவிட்டன. 2026-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யப்போவதாகக் கூறப்படுகிறது. “ஒவ்வொரு வருஷமும் சின்னச் சின்ன மாற்றங்கள்தானே வருது”னு அலுத்துப்போன ரசிகர்களுக்கு, இந்த முறை ஆப்பிள் ஒரு தரமான சம்பவத்தைக் காத்திருப்பில் வைத்திருக்கிறது.
இந்திய வெளியீடு மற்றும் விலை
வழக்கம்போல ஆப்பிள் நிறுவனம் தனது புதிய போன்களை செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தும். அந்த வகையில், ஐபோன் 18 ப்ரோ இந்தியாவில் 2026 செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை சுமார் ₹1,34,900 முதல் ₹1,44,900 வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது அதன் முந்தைய மாடல்களைப் போலவே பிரீமியம் விலைப் பிரிவிலேயே இருக்கும்.
டைனமிக் ஐலண்ட் மாற்றம் மற்றும் டிஸ்ப்ளே
ஐபோன் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான் அந்தத் திரையில் இருக்கும் டைனமிக் ஐலண்ட் (Dynamic Island). ஆனால், ஐபோன் 18 ப்ரோ மாடலில் இது முழுமையாக நீக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பதிலாக, ‘அண்டர்-டிஸ்ப்ளே பேஸ் ஐடி’ தொழில்நுட்பத்தைக் கொண்டுவர ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதனால் திரையின் ஓரத்தில் ஒரு சிறிய ஓட்டை (Punch-hole) மட்டுமே இருக்கும். இது கிட்டத்தட்ட ஒரு முழுமையான ஆல்-ஸ்கிரீன் அனுபவத்தைக் கொடுக்கும்.
மிரட்டலான 2nm சிப் மற்றும் மெக்கானிக்கல் கேமரா
இந்த முறை ஆப்பிள் தனது சொந்தத் தயாரிப்பான A20 ப்ரோ சிப்செட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. இது உலகிலேயே முதல்முறையாக 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படவுள்ளது. இதனால போன் சூடாகுறது குறையும், பெர்பாமன்ஸ் வேற லெவல்ல இருக்கும். கேமராவைப் பொறுத்தவரை, ஒரு ‘மெக்கானிக்கல் ஐரிஸ்’ (Mechanical Iris) வசதி வரப்போகிறதாம். இதன் மூலம் டிஎஸ்எல்ஆர் கேமராவுல இருக்குற மாதிரி லென்ஸை அட்ஜஸ்ட் பண்ணி வெளிச்சத்தை நம்மாலே கட்டுப்படுத்த முடியும். நைட் போட்டோகிராபி எடுக்குறவங்களுக்கு இது ஒரு மேஜிக் மாதிரி இருக்கும்.
நிஜத்தைச் சொல்லப்போனா, ஆப்பிள் இந்த முறை டிசைன்ல மட்டும் இல்லாம, உள்ளுக்குள்ள இருக்குற டெக்னாலஜியிலயும் ஒரு பெரிய புரட்சியைச் செய்யப் போகுது. காபி பிரவுன் மற்றும் பர்கண்டி போன்ற புதிய கலர்கள்ல வரப்போற இந்த ஐபோன் 18 ப்ரோ மாடல்களுக்காக இப்போவே பல பேர் காசைச் சேர்த்து வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆப்பிளோட இந்த ரகசியத் திட்டங்கள் உங்களை ஆச்சரியப்படுத்துதா? கமெண்ட்ல சொல்லுங்க!





