---Advertisement---

கண்கலங்க வைத்த சாதனை…விஜயகாந்த் மீது ரசிகர்கள் வைத்திருப்பது கணக்கிடமுடியாத அன்பு…

Published on: May 4, 2024
vijayakanthவ்
---Advertisement---

“புரட்சி கலைஞர்”, “கேப்டன்”என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

அவர்  இறந்து விட்டதாக யாரும் நம்ப கூடவில்லை. இந்த நிமிடம் வரை அவரின் ரசிகன் ஒவ்வொருவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தான் நினைத்து பூஜித்துக்கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். பெரும் திரளான ரசிகர்கள் புடை சூழ நடந்தது அவரின் இறுதி ஊர்வலம்.

கூடிய கூட்டத்தை பார்த்து விஜயகாந்த்தின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுது நன்றி சொன்ன காட்சியையும் பார்க்க முடிந்தது அவரின் இறுதி ஊர்வலத்தில்.

விஜயகாந்தினுடைய பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது அலுவலகத்தில் உள்ள  நினைவிடம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் 15 லட்சத்துக்கு மேலானோர் நினைவிடத்திற்கு வருகை தந்து விஜயகாந்த் மீதான தங்களது அன்பினை காணிக்கையாக்கி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

vijayakanth
vijayakanth

லிங்கன் புக் ஆஃப்ரெக்கார்ட்ஸ் (Lincoln Book Of Records)ல் குறைந்த நாட்களில் அதிக பட்சமானோருக்கு உணவு வழங்கிய நினைவுச்சின்னம் என்ற சாதனையை புரிந்துள்ளது விஜயகாந்தின் நினைவிடம். இது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலான நினைவுச்சின்னங்களை வைத்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாகும்.

உயிருடன் அவர் இருந்த வரை யாரும் பசியோடு இருக்கக்கூடாது என நினைத்து தன்னை தேடி வரும் ரசிகனுக்கு  தனது அலுவலகத்தில் உணவு சாப்பிட வைத்தே தான் அனுப்புவாராம்.

‘கம்பன் வீட்டு தறியும் கவி பாடும்’ என சொல்லப்படுவதை உண்மையாக்கி காட்டிவிட்டது கேப்டனின் நினைவிடம். தினசரி பூஜைகளுடன் அண்ணதானமும் வழங்கப்பட்டு வருவது தொடரும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!