---Advertisement---

சுந்தர.சியை கலங்க வைத்த மனோபாலா…சொன்னதை அப்படியே செய்து காட்டினாராம்.

Published on: May 8, 2024
sundar.c
---Advertisement---

வெயில் ஒரு பக்கம் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, பள்ளிக்கூடங்கள் எல்லாம் கோடை விடுமுறையை அறிவித்திருக்கிற நேரத்தில் என்டர்டைன்மென்ட்டுக்கு எங்கடா போகலாம்னு மக்கள் திணறிக்கொண்டு  அங்கே  இங்கேயென  போய் பொழுதை போக்கிக்கிட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட நேரத்தில்  தமிழ் சினிமாவிலும்  எதிர்பார்த்த அளவிலான படங்கள் எதுவும் பெருசா வெளியாகவில்லை  சம்மர் ஸ்பெஷலாக.

விஷாலின் “ரத்னம்” படம் வந்திருந்தாலும் போகவா?, வேண்டாமா?ன்னு யோசித்துக்கொண்டு இருக்கிறார்களாம் ஆடியன்ஸ். ‘கேப்ல கிடா வெட்டுற மாதிரி’, “அரண்மனை 4″லை ரிலீஸ் பண்ணி இருக்கிறார் சுந்தர் சி. பாசிட்டிவான விமர்சனத்தை வாங்கி இருக்கிறது படம். சுந்தர்.சி பேசும் போது மறைந்த மனோபாலாவை பற்றி சொல்லி கலங்கியிருப்பார்.

manobala
manobala

“அரண்மனை” படங்களின் சில பாகங்களில் நடித்திருப்பார் அவர். கோவை சரளா, சந்தானம், சூரியுடன் இவர் செய்த குறும்புகள ரசிக்கவைத்தது. மற்ற பாகங்கள் மாதிரியே அரண்மனை நான்கிலும் மனோபாலாக்கு ஒரு கேரக்டர் ரெடி பண்ணி வைத்திருந்தாராம் சுந்தர்.சி. உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மனோபாலா ஒரு மெசேஜ் அனுப்பி இருந்திருக்கிறார் மருத்துவமனையிலிருந்து சுந்தர்.சிக்கு. உன் படத்துல என்னால் நடிக்க முடியல, என்னை மன்னித்துவிடு. என்னால் இனி உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது எனச்சொல்லி, மருத்துவமனையில் அட்மிட் ஆன போட்டோவையும் இணைத்திருந்தாராம்.

சுந்தர்.சி பதிலுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, சீக்கிரம் நீங்கள் நலமாயிடுவீங்க, அடுத்த படத்தில் நாம் சேர்ந்து நடிக்கத்தான் போறோம் எனச்சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

நான் அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டேன். உன் கூட இனி நடிக்கும் வாய்ப்பு கிடையாதுன் என பதில் அனுப்பி இருக்கிறார் மனோபாலா. அதே போல அவரது மறைவு செய்தி சுந்தர்.சி.யை வந்தடைந்திருக்கிறது. இனி சுந்தர்.சி.யுடன் இணைவதற்கு வாய்ப்பே கிடையாது என அவர் கடைசியாக சொல்லியது போலவே நடந்து விட்டதாக வருந்தியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!