---Advertisement---

டாணாக்காரன் திரைப்படத்தை காவலர் பயிற்சிக்கல்லூரியில் போட்டு காட்டிய இயக்குனர் தமிழ்

Published on: April 27, 2022
---Advertisement---

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் டாணாக்காரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படம் காவலர் பயிற்சியில் நடக்கும் நிறை குறைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படம் காவலர் பயிற்சி கல்லூரியில் படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களால் அனைவருக்கும் போட்டு காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குனர் தமிழ் கூறியிருப்பதாவது

டாணாக்காரன் திரைப்படத்தை அனைத்து காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடலுக்கு ஆணை பிறப்பித்த காவல்துறை பயிற்சி தலைவர் திரு அருண் IPS அவர்களுக்கும் அசோக்நகர் காவலர் கல்லூரியில் நடந்த திரையிடலுக்கு எங்களை அழைத்த முதல்வர் திரு மணிவண்ணன் IPS அவர்களுக்கும் படக்குழுவின் சார்பாக நன்றி என இயக்குனர் தமிழ் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.