யோகிபாபு சமீப வருடங்களாக திரைத்துறையில் புகழ்பெற்ற காமெடி நடிகராக வலம் வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் இவருக்கு தனியான பாடலே வைத்திருந்தார்கள் அந்த அளவு இவர் காமெடி இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்ற அளவு தற்போது உள்ளது.
இவர் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாத நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆரணி அருகே உள்ள குலதெய்வ கோவிலில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை மணம் முடித்தார்.
இந்நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

