ஒரு காலத்தில் வரிசையாக பல ஹிட் படங்களில் நடித்தவர் விமல். இவரின் தெற்கத்தி பேச்சும் இயல்பான பாடி லாங்வேஜ் உள்ளிட்டவை எளிதில் மக்களுக்கு பிடித்து விட்டதால் வேகமான ஹீரோவாக வெகு வேகமாக வளர்ந்தார்.
பாண்டிராஜ் இயக்கிய முதல் படமான பசங்க படத்தில் ஆரம்பித்து இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்.
அதிலும் இவர் நடித்த களவாணி மிகப்பெரிய ஹிட் ஆனதால். விமலும் பிஸியான ஹீரோவானார். ஆனால் அதிக படங்களில் மட்டும் நடித்து விட்டு இவர் கதைகளில் கவனம் செலுத்தவில்லை அதனால் இவர் மார்க்கெட் வழு இழந்தது.
இந்த நிலையில் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு வெற்றிகொண்டான் என்ற படத்தில் நடிக்கிறார் நல்லவிதமான பாஸிட்டிவ் டைட்டிலுடன் இவர் நடிக்க வருகிறார்.
இந்த படத்தை இயக்குபவர் வேலுதாஸ்.
இந்த படமாவது விமலுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கிறதா என பார்ப்போம்.
Happy to Launch the First Look of Vimal's #VetriKondaan#VetriKondaanFirstLook #Veludoss @ActorVemal @NarangMisha @actorsathish @Ramydop @editorkishore @dinesh_dance @Viveka_Lyrics @sureshmenonnew @soundaall @KskSelvaPRO pic.twitter.com/AyZWkmZIpK
— VijaySethupathi (@VijaySethuOffl) August 27, 2021

