தருமபுரி மாவட்டத்தில் உள்ளது ஓக்கேனக்கல் அருவி. மிக சிறப்பு வாய்ந்த இந்த அருவியில் ஒரு பக்கம் படகு சவாரியும் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் ஓக்கேனக்கலில் படகு சுற்றுலா சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் பல சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றால் படகு சவாரி நிறுத்தப்பட்டது மற்றும் அருவியை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் ஒக்கேனக்கல் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி. மாலை 4.30க்கு மேல் வரும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

