சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சியிடம் ரசித்து செய்த படம் பற்றி ஒரு இணைய சேனலில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி நான் ரசித்து செய்த படம் மதகஜராஜா அதில் க்ளைமாக்ஸ் மட்டுமே 20 நிமிடத்துக்கு மேல் வரும் 1 ரீல் முழுவதும் வரும்.
அதில் க்ளைமாக்ஸ் காமெடியாக வரும் சந்தானம், விஷால், மனோபாலா போன்றோர் பங்கேற்ற காமெடி க்ளைமாக்ஸ் அது. படம் வெளிவந்து இருந்தால் ரசிகர்கள் ரசித்து சிரித்து மகிழ்ந்து இருப்பார்கள்.
அந்த படத்தின் ப்ரொட்யூசர் முந்தைய படத்தின் கடனால் இந்த படத்தை வெளியிட்டால் சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து இதுவரை அந்த படத்தை வெளியிடவில்லை.
இவ்வளவிற்கும் அப்படத்துக்கு நல்ல வியாபாரம் இருந்தது அப்படி இருந்தும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்பவும் அந்த படம் வரவேண்டியது அந்த தயாரிப்பாளர் கையில் தான் உள்ளது என கூறி இருக்கிறார்.

