கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்

கன்னட சினிமா உலகின் முன்னணி நடிகராக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார். வீரப்பன் இவரை கடத்தியது மூலம் அனைவருக்கும் தெரிந்தவரானார். இவரது மறைவுக்கு பிறகு இவரது மகன்கள் தான் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வந்தனர்.

இதில் புனித் ராஜ்குமார் கன்னட சினிமா சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார் இன்று காலையில் ஜிம்மில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் காலமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் அதிகப்படியான ரசிகர்களை கொண்ட புனித் ராஜ்குமாரின் மறைவை கன்னட ரசிகர்கள் ஏற்க முடியாமல் துயறுடன் உள்ளனர்.