தன் டப்பிங் பணிகளை பேசி முடித்த கார்த்திக்

தன் டப்பிங் பணிகளை பேசி முடித்த கார்த்திக்

ஹிந்தியில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அந்தாதூன் இந்த திரைப்படத்தின் உரிமையை தமிழில் வாங்கி இயக்குகிறார் நடிகர் தியாகராஜன்.

தன் மகன் பிரசாந்த்தை நாயகனாக்கி பிரியா ஆனந்தை நாயகியாக்கி இப்படத்தை இயக்கி வருகிறார்.

பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில் நடிகர் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சிம்ரனும் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது

இப்படத்தின் டப்பிங் பணிகளும் நடந்து வருகிறது.இப்படத்தில் நடிகர் கார்த்திக் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார்.