பாடகர் அருண்மொழி பிறந்த நாள் இன்று

பாடகர் அருண்மொழி பிறந்த நாள் இன்று

இளையராஜாவிடம் புல்லாங்குழல் வாசிக்கும் கலைஞராக அறிமுகமானவர் . அருண்மொழி இவரின் இயற்பெயர் நெப்போலியன். இவர் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர்.

இளையராஜாவின் இசையில் பல்வேறு படங்களில் புல்லாங்குழல் இசைத்துள்ள அருண்மொழி கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹாரம் படத்தில் இடம்பெற்ற நீலக்குயிலே சோலைக்குயிலே பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார்.

தொடர்ந்து தனது காந்தர்வ குரலால் பல பாடல்களை பாடியுள்ள அருண்மொழியின் பிறந்த நாள் இன்று.

நெப்போலியன் என்ற இயற்பெயரை மாற்றி அருண்மொழி என வைத்தது இசைஞானி இளையராஜா ஆவார்.