ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை

ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை

சைவம், வைணவம், காணபத்தியம், கெளமாரம் என சிவன், முருகன், விநாயகன், விஷ்ணு என ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு மதம் போல அனுஷ்டித்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த பிரித்து பிரித்து வழிபடும் முறையை மாற்றியவர் ஜகத்குரு ஆதிசங்கரர் அவர்கள்.

தாய்மூகாம்பிகை நிறுவியவர்.

எல்லோருக்கும் ஆதி சங்கராச்சாரியார் என இவரை சொல்லலாம்.

இவர்தான் இந்த தனித்தனி கடவுள் வழிபடும் முறைகளை ஒன்றாக்கி ஹிந்து மதத்தை ஒன்றாக்கியவர் என சொல்லலாம்.

இவருக்கு மைசூரில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

மைசூரில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கரர் அவர்களின் திருவுருவ சிலை கேதார்நாத்தில் நவம்பர் 5 ஆம் தேதி நமது பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்க பட இருக்கிறது.