தனுஷ் ஹீரோவாக நடித்தும், இயக்கியும் வரயிருக்கும் படம் “ராயன்”. ராஜ்கிரணை வைத்து “பவர் பாண்டி” படத்தை இயக்கியிருந்தார் தனுஷ் இதற்கு முன்னர். தனுஷின் ஐம்பதாவது படம் “ராயன்”. இதானலேயே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருக்கிறார்.
“ராயன்” விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இதற்கு முன் தனுஷ் – ரகுமான் காம்போவில் வந்த படங்களும், படத்தின் பாடல்களும் மெகா ஹிட் ஆகியிருந்தது. இதனால் “ராயன்” படத்தின் இசை மீதும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

“ராயன்” படத்தில் இயக்குனராகவும், நடிகராகவும் மட்டுமில்லாமல் பாடல்களையும் எழுதியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் – தனுஷ் இணைந்து பாடிய பாடலை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். கலக்கல் குத்துப் பாடலாக வெளிவந்த அந்த பாடலுக்கு கடுமையான வரவேற்பு கிடைத்தது.
அதே போல படத்தின் இரண்டாவது பாடலாக ‘வாட்டர் பாக்கெட்’ பாடலும் வெளியிடப்பட்டது. லிரிக்கல் வீடியோவாக வந்த இந்த இரண்டு பாட்டுக்களும் சூப்பர் ஹிட் வரிசைக்கு சென்றது.
படத்தின் மூன்றாவது பாடலை தற்போது வெளியிட்டு இருக்கிறது சன் பிக்சர்ஸ். ‘தெருக்குரல்’ அறிவு பாடலை பாடியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமானின் வழக்கமான வைபில் வெளி வந்திருக்கிறது ‘காட்டாறு, காட்டாறுடா’ என துவங்கும் “ராயன்” படத்தின் மூன்றாவது பாடல்.
பாடலை கேட்கும் போதே வெறி ஏற்றும் ஆக்சன் காட்ச்சிக்கான பின்னனியாகத் தான் இருக்கும் என தோனவைத்து விட்டது. எப்படியோ நிச்சயமாக இருக்கிறது ஒரு மெகா ட்ரீட் தனுஷ் ரசிகர்களுக்கு என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது இந்த பாடல் வெளியான பிறகு.

