---Advertisement---

காணாமலே போன கெளரி…புது புது அர்த்தத்தை சொன்னவருக்கு புதிராக மாறிய வாழ்க்கை…

Published on: May 14, 2024
sithara
---Advertisement---

கே.பாலச்சந்தரின் “புதுப்புது அர்த்தங்கள்”  படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சித்தாரா. படம் ஹிட்டானதோடு மட்டுமல்லாது தமிழ் நாடு முழுவதும் அறியப்படும் விதமான பெயரை வாங்கிகொடுத்தது  அவருக்கு.  ரகுமானுடன் இதில்  நடித்திருந்தார் அவர்.   படத்தின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர இன்றும் ‘கேளடி கண்மனி’ பாடல் தினமும் எங்காவது ஒரு இடத்தில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

“புது வசந்தம்”  இவருக்கு பெரும் திருப்புமுனையை  தந்த படம் என்றே சொல்லலாம். நட்பை வித்தியாசமான முறையில் சொல்லியிருப்பார் விக்ரமன் இந்த படத்தில்.  வெளிவந்த நேரத்தில் ஆணும், பெண்ணும் இப்படி பழக முடியுமா? என்ற கேள்வியை எழவைத்திருந்தாலும் பின்னர் அது ஏற்கப்பட்ட விதத்தை சொன்னது படம் ஓடிய நாட்கள்.

puthu vasantham
puthu vasantham

 

முரளி, ராஜா, ஆனந்த பாபு, சுரேஷ், சார்லி என இவர்களோடு சேர்த்து சித்தாராவிற்கும் அதிகமான வாழ்த்துக்களை வாங்கித்தந்த படம் இது. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருந்த இவர்.  தமிழ் மொழியில் 50க்குமேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக பெரிய அளவில் தன்னை ரசிகர்கள் மத்தியில் பேச வைக்கமுடியால் போக வைத்தாலும். நாளடைவில் தமிழ் சினிமாவின் முன்னனிகளின் படங்களில் நடித்ததால் மீண்டும் இவரது முகம் தெரியவந்தது வெள்ளித்திரையில்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “படையப்பா” படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பெயர் வாங்கினார். அந்த படத்தில் இவருக்கும் முக்கியத்துவம் அதிகம் இருக்கும் விதமாகத்தான் கதை அமைந்திருந்தது. முகவரி படத்தில் ரகுவரனுக்கு மனைவியாக, அஜீத்குமாருக்கு அண்ணியாக நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு பெயர் வாங்கிதான் தந்தது. இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் 50 வயதை கடந்தும் திருமணமே முடிக்காத நடிகைகளின் பட்டியலில் சேர்த்தது சித்தாராவையும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Parthiban and K Bhagyaraj at the South Indian Film Writers Association event.

விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?

Minister Rajmohan helping actor Pava Lakshmanan with housing.

வீடில்லாமல் தவித்த பாவா லட்சுமணன்.. கண்ணீர் மல்க உதவிய அமைச்சர் ராஜ்மோகன்! நெகிழ்ச்சியான தருணம்!

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!

SS Rajamouli honoured at the Wall of Filmmakers in Institut Lumière, France.

உலகையே அதிரவைத்த ராஜமௌலி! ஸ்கோர்செஸி வரிசையில் இடம் பிடித்த முதல் இந்தியர்.. பிரான்சில் நடந்தது என்ன?

Superstar Rajinikanth in the official announcement poster of Jailer 2.

இதுதான் அந்த மாஸ் அப்டேட்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்.. அக்டோபரில் அதிரப்போகும் தியேட்டர்கள்!

Lokesh Kanagaraj and Wamiqa Gabbi in the movie DC.

ரத்தக் களறியாகும் ‘தேவதாஸ் – சந்திரா’ காதல்! லோகேஷ் கனகராஜின் அதிரடி என்ட்ரி.. ஜூலை 31-ல் ‘DC’ மெகா ரிலீஸ்!