---Advertisement---

Heavy Action Miss: ‘பிளாஸ்ட்’ (Blast) படத்தில் அபிராமி ஏற்று நடித்த அதிரடி வேடம் முதலில் எனக்குத்தான் வழங்கப்பட்டது! – நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்; நழுவிப்போன அந்த வாய்ப்பு குறித்த வெளிப்படையான பேச்சு!

Published on: June 12, 2026
Actress Swasika explaining why she missed out on the powerful action role played by Abhirami in Arjun Sarja's blockbuster movie Blast.
---Advertisement---

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை ஸ்வாசிகா. சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா – த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ (Karuppu) திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். இந்நிலையில், அண்மையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பிளாஸ்ட்’ (Blast) திரைப்படத்தில் தனக்கு வந்த மாஸ் வாய்ப்பை தவறவிட்டது குறித்து ஸ்வாசிகா தற்பொழுது மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இதுகுறித்து பேசிய ஸ்வாசிகா, “பிளாஸ்ட் திரைப்படத்தில் தற்பொழுது நடிகை அபிராமி மேம் பண்ணியிருந்த அந்த பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க முதன்முதலில் என்னைத்தான் படக்குழுவினர் அணுகினார்கள். ஆனால், அந்த சமயத்தில் நான் சூர்யா சாருடன் ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்தேன். அதுமட்டுமன்றி, இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் நான் இணைந்து நடித்துள்ள ‘நூறு சாமி’ (Nooru Saami) திரைப்படத்தின் இறுதிதிக்கட்ட வேலைகளும் ஒரே நேரத்தில் நடந்து வந்தன.”

“இந்த அடுத்தடுத்த படங்களின் கமிட்மென்ட்களால், பிளாஸ்ட் படக்குழுவினர் கேட்ட தேதிகளில் (Dates) என்னால் கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. அதனால் மிகவும் கனத்த இதயத்துடன் அந்த வாய்ப்பை மறுக்க வேண்டியதாயிற்று. சமீபத்தில் திரையரங்கில் அந்த படத்தை பார்த்த போது, ஐயோ.. இப்படி ஒரு செம ஆக்ஷன் ரோலை மிஸ் பண்ணிட்டோமே என்று எனக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டது. இருந்தாலும் அபிராமி மேம் அந்த ரோலை ரொம்பவே மிரட்டலாக செய்துள்ளார். எதிர்காலத்தில் எனக்கு இது போன்ற முழுநீள ஆக்ஷன் கதைகளோ அல்லது அதிரடியான கதாபாத்திரங்களோ வந்தால் கண்டிப்பாக அதைத் தவறவிடாமல் நடிப்பேன்” என்று ஸ்வாசிகா தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.