---Advertisement---

இன்று பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு நாள்

Published on: September 12, 2025
---Advertisement---

கடந்த 1987 ஆம் ஆண்டு வெளிவந்த நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் ஸ்வர்ணலதா.

அதன் பிறகு 1988ல் வெளிவந்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் இடம் பெற்ற தனிப்பாடல் ஆன உத்தமபுத்திரி நானு என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார், இளையராஜாவுக்கு மிக விருப்ப பாடகியான  சுவர்ணதாவை அதிக பாடல்கள் பாட வைத்தார் இளையராஜா, குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திலிருந்து ஆட்டமா தேரோட்டமா, பாசமுள்ள பாண்டியரே, போன்ற பாடல்கள் இவரின் புகழை அதிகம் பறைசாற்றின. மாலையில் யாரோ மனதோடு பேச போன்ற ஒரு பாடல் ஒன்றே போதும் இவரின் புகழை அதிகம் சொல்ல.

 

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட, என்னுள்ளே என்னுள்ளே, போன்ற பல பாடல்கள் இவரை புகழின்  உச்சத்தில் கொண்டு போய் சேர்த்தன. மிக இனிய குரலுக்கு சொந்தக்காரர் கேட்டவுடனே நாம் மதி மயங்கும் அளவுக்கு இவரின் குரல் அவ்வளவு அருமையாக இருக்கும்.

 

இன்றோடு ஸ்வர்ணலதா மறைந்து 15 ஆண்டுகள் ஆகிறது கடந்த 2010 ஆம் ஆண்டு சுவர்ணலதா மறைந்தார். புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் அந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து தன்னுடைய 37 வது வயதில் மரணமடைந்தார். அவர் இறந்தாலும் இன்னும் அவரின் பாடல்கள் இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் எங்கோ ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

 

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.