இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என ஒரு காலத்தில் விளம்பரம் செய்து டிவிக்களில் விளம்பரம் செய்யப்பட்டது. உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ற ஒரு அடைமொழியும் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டு இன்றுவரை அது நடைமுறையில் உள்ளது.
திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடும் போக்கு சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது இந்த சூழ்நிலையில் சன் நிறுவனம் ஓடிடி வியாபாரங்களையும் குறைந்த செலவில் நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தை குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்து தியேட்டர்களில் வருவதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பபடுகிறது.
திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே என விளம்பரம் செய்யப்பட்டு வரும் நவம்பர் 14 தீபாவளியன்று சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பாகிறது.
பத்ரி இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரசன்னா, யோகிபாபு,ஸ்யாம், ஸ்ருதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.







