---Advertisement---

சர்வதேச திரைப்பட விழாவில் சூரரை போற்று

Published on: May 15, 2021
---Advertisement---

கடந்த தீபாவளிக்கு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். சில நாட்களில் டிவியிலும் இப்படம் ஒளிபரப்பாகி விட்டது.

சாதாரண மனிதன் எளிய மக்களும் ஏரோப்ளேனில் செல்லுமளவுக்கு விமான நிறுவன முதலாளி ஆகி எளிய மக்களுக்கு உதவுகிறான் என்பதே இப்பட கதை ஆகும்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது.
ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு சிறப்பான முறையில் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, வருகிற ஜுன் 11 ம் தேதி துவங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.