---Advertisement---

சிவகங்கை அருகே டிபன் பாக்ஸ் வெடித்து 3 சிறுவர்கள் காயம்

Published on: October 26, 2021
---Advertisement---

சிவகங்கையை அடுத்த கீழக் குளத்தில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடத்தில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த செல்ல முத்து மகன் ராம்கிஷோர் (8), காளிமுத்து மகன் நவீன்குமார் (13), முத்துராக்கு மகன் வைணவன் (11) ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அங்கு சிறிய பெட்டி போன்ற பொருள் கிடந்தது. அதை தட்டிப் பார்த்தபோது சத்தம் கேட்டது. அதை திறக்க முயன்றனர். மிகவும் சிரமமாக இருந்ததால் பெட்டியை சாலையில் வீசி உடைக்க முயன்றனர். அப்போது அது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் மூவரும் காயமடைந்தனர். அவர்களை கிராம மக்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த ராம்கிஷோர் தீவிர சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வெடித்த மர்மபொருள் குறித்து சிவகங்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வெடித்த பொருளின் எஞ்சிய பகுதிகளை சேகரித்து ஆய் வகத்துக்கு அனுப்பினர்.

வெடித்தது நாட்டு வெடிகுண்டு தயாரிப்புக்குரிய வெடிபொருளாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

Ilayaraja Golden Jubliee

“ஜூன் 2 மிஸ் ஆயிடுச்சு – ஆனா செப்டம்பர் 13 மிஸ்ஸே ஆகாது”. பாராட்டு விழா!! நடத்தும் தமிழக அரசு!!

Anurag Kashyap- Ravi Mohan

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் உங்கள் பிரியமான நட்சத்திரத்திற்கு வாழ்த்து சொல்ல மறக்காதீர்கள்!

Jailer2

ஜெய்லர் 2 படப்பிடிப்பு துவக்கம்: ரஜினியுடன் சிவராஜ்குமார் சேர்ந்து வைரலான வீடியோ!