தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜ்குந்த்ரா என்ற தொழிலதிபரை காதலித்து மணம் முடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் இவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு விற்கிறார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 119 ஆபாச வீடியோக்கள் கொண்ட ஹார்டு டிஸ்க்குகளை போலீஸ் கைப்பற்றியுள்ளது.
இவற்றை 9 கோடி ரூபாய் அளவுக்கு இவர் விற்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








