பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான். இவரது மகனான ஆர்யன் கான் சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள ஒரு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் விசயமாக கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது போதைப்பொருள் உபயோகித்ததாக வழக்கு உள்ளது.
இவருக்கு ஜாமீன் தரவும் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதனால் அவரது தந்தை ஷாருக்கான் மிகுந்த கவலையடைந்துள்ளார். இந்த நிலையில் ஷாருக் வீட்டில் இன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று சோதனை நடத்துகின்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே
இதன் காரணமாக நடிகர் ஷாருக்கான் இன்று காலை 9 மணிக்கு மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச்சாலைக்கு சென்றார். அங்கு அவர் அனுமதி பெற்று ஆர்யன்கானை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் மகனுடன் ஷாருக்கான் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவர் கண்ணீர் மல்க தைரியமாக இருக்கும்படி ஆர்யன்கானிடம் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
9.35 மணிக்கு ஷாருக்கான் அங்கிருந்து விடைபெற்று காரில் புறப்பட்டு சென்றார். ஷாருக்கான் சிறைக்கு வந்திருக்கும் தகவல் அறிந்ததும் ஏராளமானோர் ஆர்தர் சாலையில் குவிந்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.









