---Advertisement---

ஷாருக் அட்லி இணையும் படம் இந்த படத்தின் தழுவலா

Published on: September 21, 2021
---Advertisement---

இயக்குனர் அட்லி முதன் முதலில் இயக்கிய ராஜா ராணி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த படம் மோகன், ரேவதி நடித்து மணிரத்னம் இயக்கிய மெளனராகம் படத்தின் தழுவல் என சொல்லப்பட்டது.

பின்பு இயக்கிய தெறி படம் சத்ரியன் படத்தின் தழுவல் எனவும், மெர்சல் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களின் கூட்டு கலவை என்றூம் கடைசியாக தமிழில் இயக்கிய பிகில் படம் சக்தே இந்தியா படத்தின் தழுவல் எனவும் சொல்லப்பட்டது.

அட்லி ஒரு காப்பி மன்னன் எனவும் சமூக வலைதளங்களில் அவர் மீது தாறுமாறு விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்களை அவர் மறுக்கவும் இல்லை.

தற்போது அட்லி ஷாருக்கானை வைத்து தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளியாகும் வகையில் ஒரு படம் செய்து வருகிறார். இந்த படத்தின் பெயர் லயன்.

இப்படம் உலகப்புகழ்பெற்ற வெப்சீரிஸான மணி ஹீஸ்டின் என்ற வெப் சீரிசின் தழுவல் என சொல்லப்படுகிறது.

இது உண்மையா என படம் வந்த பிறகுதான் தெரியும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.