---Advertisement---

இந்தியன் தாத்தா பராக்!…பராக்…!ஷங்கர் போட்ட பக்கா ஸ்கெட்ச்?…

Published on: April 30, 2024
shankar kamal
---Advertisement---

‘லைகா புரொடக்சன்ஸ்’ – ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெள்ளித்திரையை தொட தயாராக இருக்கிறது இந்தியன்- 2.

தமிழ் திரை உலகை,  உலக சினிமா ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்த படம் இந்தியன் முதல் பாகம். வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன் இரண்டாம் பாகத்திலேயும் கமல் – ஷங்கர் கூட்டணியே இணைந்துள்ளது. பிறகு என்ன கேட்கவா வேண்டும். இதுவும் வெற்றிதான் என அடித்து அரூடம் சொல்லி வருகின்றனர் உலக நாயகன் ரசிகர்கள்.

வருகிற மே மாதம் 16ம் தேதி இந்தியன்-2 பாடல்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அனிரூத் இசையமைப்பை மேற்கொண்டுள்ளார்.

ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தானே. அதனால் இந்த இசை வெளியீட்டு விழாவையும் வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்பதில் ஷங்கர் மிக பிடிவாதமாக இருக்கின்றாராம். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடக்கயிருப்பதாக மேலும் ஒரு செய்தியும் கசிந்துள்ளது.

பிரம்மாண்டம் ஏற்பாட்டில் மட்டுமிருந்தால் போதுமா?, மேடை கலைகட்ட வேண்டுமல்லவா, அதனால் சூப்பர் ஸ்டாரும், கமலின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்தை அழைக்கவும் முடிவு செய்துள்ளாராம் ஷங்கர்.

chiranjeevi ramcharan
chiranjeevi ramcharan

இது மட்டும் போததே இன்னும் அதிகம் இருந்தால் மிக நன்றாக இருக்குமே என்ற  சிந்தனை மறுபடியும் ஷங்கரின் மூளையை குடைய துவங்கியதாம். சரி இன்னொரு இன்ப அதிர்ச்சியை விழாவில் கொடுத்து விடலாம் என நினைத்த ஷங்கர், ரஜினியின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் அவரது மகனும், டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ராம் சரனையும் கூப்பிட உள்ளாராம். இந்த தகவல்களை “வலைப்பேச்சு” அந்தணன் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

AGS Entertainment producer Archana Kalpathi clarifying rumors about actor Simbu and director Aswath Marimuthu movie status in a recent interview.

சிம்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து படம் டிராப் ஆகிடுச்சா… கிளம்பிய வதந்திகளுக்கு நேர்காணலில் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!