---Advertisement---

நம்ம போட்ட ஆட்டம் எல்லாம் வெறும் நாலு வருஷம் தாங்க….நெருங்க முடியாத ரெக்கார்டுகளை படைத்த ராமராஜன்!…

Published on: May 9, 2024
ramarajan
---Advertisement---

“சாமானியன்” படத்தின்  மூலமாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ராமராஜன். இவருடைய வெற்றி படங்களை கணக்கிட்டு பார்ப்பது சிறிது கடினமே. அன்றைய காலத்திலேயே இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் போன்றவர்களுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்து வந்திருந்தார். இவரது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் முன்னணிகள் கூட ஒரு நிமிடம் தங்கள் படத்தை விடலாமா?, வேண்டாமா? என யோசிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.

வெறும் நான்கு ஆண்டுகள் மட்டும் தான் சினிமாவில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அவரது சினிமா பயணத்தில் பெரிய தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த வெற்றிகள் தான் இப்பொழுது வரை அவரை பற்றி பேச வைக்கிறது.

அவரது ஜனரஞ்சகமான நடிப்பும், அவர் தேர்ந்தெடுத்த கதைகள் மட்டுமே அவரது வெற்றிக்கு காரணம் என சொல்லி விட முடியாது. அவைகளை விட முக்கியமான காரணமாக அமைந்தது அவர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் தான்.

ramarajan
ramarajan

1986 நவம்பர் மாதத்தில் தான் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார் ராமராஜன். அதிலிருந்து நான்கு வருடங்கள் மட்டுமே அவர் அதிகமாக நடித்திருக்கிறார். இன்றும் ராமராஜனுக்கென தனி பெயர் உண்டு தமிழ் சினிமாவில். ஆனால் வெறும் நான்கு வருட உழைப்பு மட்டுமே அவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பெயரையும், புகழையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் அவர் நடித்த படங்களில் பெரும்பான்மையானவை வெற்றிப்படங்களே அதிலும் பல வெள்ளி விழா கண்டவை. இந்த தகவல்களையெல்லாம் அவரே சொல்லியிருக்கிறார் ஒரு முறை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!