காமெடி நடிகர் சதீஷ் சினிமாவில் பேசுவதை விட மற்ற நிகழ்ச்சிகளில் பேசுவது, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் டுவிட் போன்றவைதான் கலக்கலாக இருக்கும். சினிமாவில் இவரின் காமெடி கொஞ்சம் அப்படி இப்படிதான் யோசித்துதான் சிரிக்க வைக்கும் ஆனால் டுவிட்டரில் கலாய்ப்பதில் வல்லவர் சதீஷ்.
அப்படியாக டுவிட்டரில் நடிகர் சதீஷ் விகடன் பத்திரிக்கை கேட்ட ஒரு கேள்விக்கு நக்கலாக பதிலளித்துள்ளார்.
அந்த பதில் என்ன என்றால் ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என் டி. ஆரும் பிரபாஸும் ஆடும் புகைப்படத்தை வைத்து இப்படி தமிழில் எந்த இரு நடிகர்கள் ஆடினால் நன்றாக இருக்கும் என கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு பதிலளித்த சதீஷ் தமிழ் படம்2 என்ற படத்தில் தானும் நடிகர் மிர்ச்சி சிவாவும் இணைந்து ஆடிய மொக்கை நடனத்தை காமெடியாக பதிவிட்டுள்ளார்.
💪🤝😜🤪 https://t.co/GmAVCgkNnk pic.twitter.com/ha161mTqJQ
— Sathish (@actorsathish) November 10, 2021









