---Advertisement---

யூ டியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்கு

Published on: October 21, 2021
---Advertisement---

பிரபல திரைப்பட நடிகை சமந்தா. தமிழில் தெறி, தங்கமகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்தார். திருமணம் முடிந்தாலும் படங்களில் நடித்து வந்தார் இவர்.

இந்நிலையில் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக இவர் தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக ஊடகங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் தொடர் சர்ச்சை செய்திகள் வெளிவந்தன.

இதனால் சமந்தா கோபமடைந்தார்.

இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சுமன் டிவி, தெலுகு பாப்புலர் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.