---Advertisement---

“சாமானியன்” என்ன அவ்வளவு சாதாரனமா போயிட்டரா?….12வருஷ தவம் வீனாகுமா!…

Published on: May 23, 2024
saamaniyan
---Advertisement---

இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன் நடித்து இன்று வெளியாகியுள்ளது “சாமானியன்”. ஒரு காலத்தில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த ராமராஜனை, 2012ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் பார்க்கின்றார்கள் அவரது ரசிகர்கள். “மேதை” படத்திற்கு பிறகு ராமராஜன் அதே கெத்தோடு களமிறங்கியிருக்கிறார் “சாமானியன்” மூலமாக.

ராமராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி இவர்கள் மூவரும் நன்பர்கள். நல்லா பேசிக்கிட்டு இருந்தவங்க திடீர்னு துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு கொள்ளையர்களாக சென்று விடுகின்றனர் வங்கிக்குள்ளே. கொஞ்ச நாள் முன்னால தான் அஜீத் இதே மாதிரி பேங்க்குள்ளே போய் கொள்ளையர்களிடமிருந்து வாடிக்கயாளர்களை காப்பாற்றுவது மாதிரி செய்துவிட்டு, நானும் கொள்ளையடிக்கத்தான் வந்திருக்கேன்னு சொல்லி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

ramarajan
ramarajan

முதல் பாதி லைட்டா மெதுவா போனமாதிரி தெரிஞ்சாலும், செகன்ட் ஹாஃப்ல ஜெட் வேகம் தான். ராமராஜனுக்கு பணத்து மேல அப்படி என்ன ஆசைன்னு யோசிக்கும் போதே திடீர்னு ஒரு பிளாஸ் பேக். ஆக அப்போதான் புரிய வருது இவரு கொள்ளையடிக்க போகல மக்களை மறைமுகமா காப்பாத்த போறாருன்னு. அவர் எதனால இப்படி செஞ்சாருங்கிறத சொல்றது தான் க்ளைமேக்ஸ்.

இளையராஜா, ராமராஜன் காம்பினேஷன் எப்பவுமே சூப்பர் ஹிட்டுதான். அதே தான் இங்கேயும் நடந்திருக்கு. பின்னனி இசையிலும் ராஜா, ராஜாதாங்கிறத காட்டிட்டாரு.  நிறைய சொந்த பிரச்சனைகளால நடிப்பை மறந்திருப்பார் ராமாராஜன்னு நெனைச்சா மனுஷன் 12வருஷம் கழிச்சும் பாஞ்சி, பாஞ்சி நடிச்சிருக்காரு, என்ன அவரோட நடிப்புக்கு ஈடுகொடுக்கிற மாதிரி படத்தை இன்னும் கொஞ்சம் வேகமா கொண்டுபோயிருக்கலாம். மொத்தத்தில் “சாமானியன்” சாதாரணமானவனில்லைன்னு சொல்ல வைச்சிட்டாரு ராமராஜன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!