---Advertisement---

சல்மான் விடுத்த எச்சரிக்கை

Published on: May 18, 2021
---Advertisement---
 சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் வெளிவந்தது. இந்த படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு வர இயலாத காரணத்தால் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியது .
இந்த நிலையில் ராதே படம் ரிலீசான சில மணி நேரத்தில் திருட்டு தனமாக இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.
இதற்கு ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்து வருகிறார்கள். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக ராதே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சல்மான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராதே படத்தை நியாயமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும்படி கோரியிருந்தோம். இந்த படத்தை திருட்டு இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பது பெரிய குற்றம். சட்டவிரோதமான திருட்டு இணைய தளங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த திருட்டு இணைய தளத்தில் இருந்து ரசிகர்கள் படம் பார்க்க வேண்டாம். மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!