---Advertisement---

என்ன பிறவி தான் இவரு?…ரோகினிக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுவரன்!…

Published on: May 19, 2024
raguvaran rohini
---Advertisement---

ரகுவரன் இவரின் தோற்றத்திற்கும் அவர் நடித்த வேடங்களுக்கும் பெரிய அளவில் சம்பந்தம் இருக்காது என்று கூட சொல்லலாம். ரஜினி படம் ஒரு காலத்தில் தயாரகிறது என்ற செய்தி வெளிவந்தாலே வில்லன் யாரு ரகுவரனா? என ஆர்வத்தை தூண்டும் விதமாகத்தான் இந்த இருவரின் கூட்டணி அமைந்திருந்தது.

“சிவா” படத்தில் சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்து சென்ற நண்பன் என தெரியாமலே ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். “அருணாச்சலம்” படத்தில் ரஜினியை வீழ்த்த நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக நடித்திருந்தார். பார்த்தவர்கள் அனைவரையுமே அம்மாடி என்னா நடிப்புடா சாமி என  வியப்பில் ஆழ்த்தியிருந்தார் “பாட்ஷா” படத்தில்.

ரகுவரன் நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் துரதர்ஷ்ட விதமாக இருவரும் பிரிந்தனர். திரைத்துறையில் பழக்கம் கிடைத்து, நிஜ வாழ்வில் இணைந்து ஆனால் எதிர்பாராத காரணங்களால் தோல்வியில் முடிந்த தம்பதியரின் பட்டியலில் இவர்களின் பெயரும் சேர்ந்தது. ரோகினி ரகுவரனை பற்றி பேசியிருக்கும் போது தங்களுக்கு திருமணமான புதிதில் தன்னால் ரகுவரனை புரிந்து கொள்ள முடியவே இல்லையாம்.

rohini raguvaran
rohini raguvaran

திடீர், திடீரென ஆவேசமாவாராம், ஆக்ரோஷமாக பேசுவாராம். என்ன நடக்கிறது என புரியாமல் குழம்பி தவித்தாராம் ரோகினி. ரகுவரனின் தாயார் ரோகினியை அழைத்து ரகுவரன் நடித்து வரும் திரைப்படத்தில் அவருக்கு என்ன வேடம் கொடுத்திருக்கிறார்கள் என பார்க்கச்சொன்னாராம். அங்கே எப்படி நடிக்க வேண்டுமோ அதற்கு ஒத்திகை பார்ப்பது போல தான் வீட்டில் நடந்து கொள்வாராம். “அஞ்சலி” படத்தில் நடித்து வந்த போது மிகுந்த அமைதியோடு இருப்பாராம் வீட்டில். இதனை கேட்ட பிறகே அமைதியானாராம் ரோகினி.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

Official single release announcement graphic for the song Muthumani from Dorothy.

Dorothy Second Single: டோரதி படத்தின் இரண்டாவது பாடல் ‘முத்துமணி’ நாளை வெளியீடு!: இசைஞானி இளையராஜா இசையில் கலக்க வரும் அடுத்த மெலடி – செப்டம்பர் 25 ரிலீஸ்!

Concept graphic representing producer Yuvaraj Ganesan and Million Dollar Studios projects.

Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Conceptual graphic representing director Ashwath Marimuthu's vision for Thalapathy Vijay's biopic.

Vijay’s Biopic: தளபதி விஜய்க்கு பயோபிக் எடுத்தால் என்ன தலைப்பு வைப்பேன்?: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்யமான சினிமா கனவு!