சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தின் மூலம் அறிமுகமானவர் ராம்கி. இவரும் ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஆபாவாணனும் நண்பர்கள். சின்னப்பூவே மெல்லப்பேசு, மருதுபாண்டி, பறவைகள் பலவிதம் , வெள்ளையத்தேவன் என ஒரு காலத்தில் பிஸியாக இருந்த ராம்கி தற்போதும் சில படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சில காலம் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்த ராம்கி தற்போது வேட்டை நாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சேனல்களுக்கு அதிகம் பேட்டி தராத ராம்கி தற்போது சில பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் அவரின் பேச்சு மிக யதார்த்தமாகவும் அழகாகவும், தென்மாவட்டத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சென்று சென்னையில் செட்டில் ஆனாலும் தென்மாவட்ட பேச்சு அப்படியே இன்னும் பேசுவது சிறப்பு.
இவரின் பேட்டியில் இவர் பேசுவது எல்லாம் கலகலப்பாகவே இருப்பது சிறப்பு.







