---Advertisement---

ராமராஜன் உடல்நிலை குறித்து பரவும் வதந்தி- ராமராஜன் தரப்பு விளக்கம்

Published on: October 19, 2021
---Advertisement---

1986ம் ஆண்டு வெளிவந்த நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். அதற்கு முன்பே ஒரு சில படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களின் வெற்றி ராமராஜனை எங்கேயோ தூக்கி வைத்தது. அதனால் ராமராஜன் 80ஸ் 90ஸ்களின் தவிர்க்க முடியாத நடிகரானார்.

90களுக்கு பிறகு இவரின் படங்கள் சிறிது சிறிதாக வெளிவருவது குறைந்தது.

ஒரு சில படங்களே வந்தன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ராமராஜன் உடல்நிலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரமற்ற செய்திகளை சில வலைதளங்கள் வெளியிட்டு இருந்தன.

இது குறித்து ராமராஜன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாறில் சரித்திரம் படைத்த ‘கரகாட்டக்காரன்’ படம் மட்டுமல்லாமல் பல நூறு நாட்கள் படங்களைத் தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமராஜனைப் பற்றி தற்சமயம் தவறான வதந்தியைப் பரப்பிவருகிறார்கள். ராமராஜன் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.

இரண்டு படங்களுக்குத் தனது கதையைத் தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!