---Advertisement---

ரஜினி கட்சி தொடங்கவில்லை மறுப்பு- மீம்ஸ் ட்ரெண்டில் ரஜினி

Published on: December 29, 2020
---Advertisement---

வரும் டிசம்பர் 31ல் கட்சி தொடங்குவதற்குரிய சரியான அறிவிப்பை வெளியிடுவேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர். வரும் 31ல் அறிவிக்க இருக்கும் கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்று கூட செய்திகள் உலாவின.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை புஸ் என்று போகும் வகையில் இன்று காலை ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையால் சமூக வலைதளங்களில் பரபரப்பு நிலவுகிறது.

தனக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் கிட்னி பிரச்சினை வரும் என்பதால் ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கையாய் எடுத்துக்கொண்டு கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்ற அறிவிப்பால் ரசிகர்கள் வருத்தமடைந்தாலும் ரஜினியை ஏற்கனவே கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்று கேலி செய்தவர்களுக்கு மீம்ஸ் போட வசதியாய் போனது.

ரஜினியை குறிவைத்த மீம்ஸ்கள், மற்றும் காமெடியான கட்டுரைகள்தான் இன்று டுவிட்டர், பேஸ்புக் தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.