---Advertisement---

ரஜினியிடம் பாராட்டு பெற்ற டேனியல் பாலாஜி!…மறைந்தாலும் மனதை விட்டு நீங்காதவர்…

Published on: May 23, 2024
rajini daniel
---Advertisement---

“வேட்டையாடு விளையாடு” படத்தின் மூலம் அறிமுகம் பெற்றவர் டேனியல் பாலாஜி. படத்தில் கமலுக்கு நிகராக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். மறைந்த நடிகர் முரளியின் சகோதரராவார் இவர், சில படங்களில் மட்டுமே தலையை காட்டியிருந்திருப்பார் இவர்,

மாரடைப்பால் மரணமடைந்த டேனியல் பாலாஜி தனது வாழ்வில் மறக்க முடியாத பாரட்டினை பற்றி பேசியிருந்தார் ஒருமுறை. “வேட்டையாடு விளையாடு” படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை மனதார பாராட்டியது தான் தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என சொல்லியிருக்கிறார். படம் பார்த்து விட்டு வெளியே வந்து படக்குழுவுடன் பேசிக்கொண்டிருந்தாராம் ரஜினி.

daniel balaji
daniel balaji

அப்போது தனது பெயரை குறிப்பிட்டு யார் அந்த பையன் நல்லா நடிச்சிருக்கானே என சொல்லிக்கொண்டிருந்தாராம். ரஜினியை விட்டு சற்று தொலைவாக நின்று  கொண்டிருந்த டேனியல் பாலாஜியை அழைத்து ரஜினிக்கு அறிமுகம் செய்யப்பட்டதாம். படத்தின் தோற்றத்திலிருந்து வேறுபட்டு, முடிகளை வெட்டி தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியபடி ரஜினி முன் நின்றவரை பார்த்து இவரா அது என ஆச்சரியத்தோடு கேட்டாராம்.

பின்னர் டேனியல் பாலாஜியின் தோளின் மீது கை வைத்த படியே வெகு நேரம் பேசிவந்தாராம். தன்னை பற்றிய விவரங்களை கேட்டுத்தெரிந்து கொண்ட ரஜினி காரில் ஏறச்சென்றாராம். திடீரென டேனியல் பாலாஜியை நோக்கி வந்து நான் இங்கிருந்து செல்கிறேன் பார்ப்போம் என சொல்லிவிட்டு வாழ்த்திவிட்டு சென்றாராம். “காக்க காக்க”, “பைரவா” படங்களிலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். கெளதம் வாசுதேவ் மேனனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த அவரின் அனேக படங்களில்  நடித்திருந்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சுந்தர.சியை கலங்க வைத்த மனோபாலா...சொன்னதை அப்படியே செய்து காட்டினாராம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Atmospheric South Indian thriller cinema editorial visual representing the cult horror thriller Pizza directed by Karthik Subbaraj.

முழு பட்ஜெட்டையும் நானே ஏற்கிறேன், சித்தார்த்தை ஹீரோவாக்குங்கள்… ‘பீட்சா’ படத்திற்கு வந்த பிரம்மாண்ட ஆஃபரைத் தட்டிக்கழித்த கார்த்திக் சுப்புராஜ் ஏன் தெரியுமா?

Youthful South Indian musical romance cinema visual representing Jason Sanjay's upcoming hero debut with director Ganesh K. Babu.

துருவ் விக்ரம் நடிக்கவிருந்த ‘டாடா’ இயக்குநரின் 7 பாடல்கள் கொண்ட மியூசிக்கல் திரைக்கதையில்… இப்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கைக்கு மாறியதா? கோலிவுட்டில் பரபரப்பு!

High-stakes South Indian action thriller cinema visual representing director Mohan Raja's upcoming film with Karthi and Thani Oruvan 2.

2027-ல் டபுள் ட்ரீட் கொடுக்கும் மோகன் ராஜா! முதலில் கார்த்தி படமா அல்லது ‘தனி ஒருவன் 2’ படமா? வெளியான முக்கிய தகவல்!

Grand South Indian cinema theatre marquee visual representing record-breaking Day 1 advance bookings for Dhanush's OM and theatrical release buzz for Dulquer Salmaan's AOT.

பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த தனுஷின் ‘ஓம்’! முதல் நாள் முன்பதிவில் மட்டும் ₹16 கோடி வசூல்… துல்கர் சல்மானின் ‘ஏஓடி’ நிலை என்ன?

Film reels and clapboard under warm festival lighting representing Tamil cinema at the 57th International Film Festival of India.

“எல்லைகளற்ற கதைகள்” கருப்பொருளில் தமிழ் சினிமா: நவம்பர் 20 முதல் 28 வரை பனாஜியில் திரைவிழா!

Actor Suriya and young actor Naslen posing together, representing the luxury watch gift for the movie 'Scene'.

சூர்யாவின் போன் நம்பரைக் கொடுங்க: நஸ்லென் வாங்கிய வாட்சைப் பார்த்து ஜாலியாகக் கலாய்த்த குஞ்சாக்கோ பாபன்!