---Advertisement---

இவங்க இல்லாம ரஜினி படம் கிடையாது….விட்டுக்கொடுக்காம வாழ்வு கொடுத்து வந்த சூப்பர் ஸ்டார்!…

Published on: May 29, 2024
rajini
---Advertisement---

பொதுவாகவே நடிகர்கள் ஒரு நல்ல நிலையை அடைந்த பின்னர் அவர்கள் நடிக்கும் படங்களில் தங்களுக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொள்வார்கள். இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் கலைஞர்கள் இல்லாமல் இந்த முன்னனிகளின் படங்களைப்பார்ப்பது அரிது எனவே சொல்லலாம்.

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பழைய படங்களில் பார்த்தோமேயானால் இந்த நடிகர்கள் இடம் பெறாத ரஜினி படங்களே கிடையாது என சொல்லலாம் “தர்மத்தின் தலைவன்” படத்தில் நடித்திருந்த வீ.கே.ராமசாமி “அருணாச்சலம்” படம் வரை நடித்திருந்தார்.

“தளபதி” படத்தில் ரஜினி, மம்மூட்டி இருவரும் நெருங்கிய நண்பர்களாக காரணாமாக இருந்தவர் தினேஷ். இந்த படத்தில் நடித்த பிறகே இவரது பெயர் தளபதி தினேஷ் என மாற்றம் பெற்றது.அதே போல ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஜனகராஜ் இல்லாத ரஜினி படங்களை பார்க்கவே முடியாது என சொல்லலாம்.

senthil rajini
senthil rajini

அப்படி ஜனகராஜ் தனது வாழ்வில் அதிகமாக இணைந்து நடித்த கதாநாயகர்களின் பட்டியலில் ரஜினி முக்கியமான இடத்தையே பிடித்திருப்பார். அதே போல கவுண்டமணிக்கு பிறகு செந்திலை ரஜினியுடன் மட்டுமே அதிகமாக பார்த்திருக்க முடியும்.

ரஜினி படத்தில் நகைச்சுவை என்றால் அதை செந்தில் தான் செய்திருப்பார் என கண்களை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அப்படி செந்திலை தன்னுடன் சேர்த்தே நடித்து வந்திருப்பார் ரஜினி.

1980 களில் வெளியான படங்களில் துவங்கி 2000மாவது ஆண்டிலும் கூட செந்திலுக்கு தனது படங்களில் அதிகமான முன்னுரிமையை வழங்கியிருப்பார் ரஜினி. அதே போல நாசரும் தான். இவர் ரஜினி படங்களில் மட்டுமல்ல ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் படங்களில் அதிகமாக நடித்திருப்பார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!