---Advertisement---

ஆடுனது நான் தான்!…ஆட்டிப்படச்சது அஜீத்…இது லாரன்ஸுக்கு கலிகாலாமா?….

Published on: April 19, 2024
rakava lawrance
---Advertisement---

நடன இயக்குனராக அறிமுகமாகி, கதாநாயகனாக மாறி இப்பொழுது தனது நடிப்பிற்காகவும், தனது நடன அசைவுகளுக்காகவும்  உற்று நோக்க படக்கூடியவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ்.

பிரபுதேவாவிற்கு இணையான நடன அசைவுகளே இவரை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வைத்து. “ஜென்டில்மேன்” படத்தில் வரும் ‘சிக்கு,புக்கு,சிக்கு,புக்கு ரயிலே’ பாடலில் நடன குழுவில் ஒருவராக வந்திருப்பார் ராகவா லாரன்ஸ்.

amarkkalam
amarkkalam

ரஜினியின் பரிந்துரையாலே தமிழ் திரை உலகுக்கு வந்த இவர், முன்னணி நடிகர்கள் படங்களில் பாடல் காட்சிகளில்  நடனமடியும் இருந்திருக்கிறார். விஜயுடன் “திருமலை” படத்தில் ஆடிய பாடலில் இருவரின் நடனம் சிறப்பானதாக அமைந்தது. அஜீத்குமாரின் “அமர்க்களம்” படத்தில் ‘காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா’ பாடல் நடனமாடியிருப்பார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் தன்னை மாற்றிக்கொண்டார், தெலுங்கு பட உலகில் இயக்குனர் அவதாரமும் எடுத்தார், தமிழில் இவர் நடித்த “முனி” படத்தின் மூலமாக தனக்கென ஒரு தனி பாணியை கையில் எடுத்தார். ‘ஹாரர்’ படங்களில் கவனம் செலுத்தியதால் குழந்தைகளின் அபிமானம் கிடைக்க துவங்கியது.

அதானலே என்னவோ ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக அது போன்ற படங்களிலேயே நடித்து  வருகிறார். அவர் இன்று இப்படி ஒரு நல்ல  நிலையில் இருக்க காரணமாக முக்கியமான நபர் பற்றிய தகவலை தனது நேர்காணல் ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

அஜீத் குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் தனது படத்தின் பாடலில் என்னை போன்ற ஒரு சிறு நடிகனுக்கு வாய்ப்பினை வழங்கிய  பெருந்தன்மையை இப்படியான ஒரு இடம் சினிமாவில் கிடைக்க காரணமாக அமைந்ததாக  சொல்லியிருக்கிறார்.

அதற்கு அடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாமே “அமர்க்களம்” பாடலின் வெற்றியை தொடர்ந்தே தானாம். அஜித் குமாருடன் அவ்வளவு நெருக்கமான ஒரு நட்பு தனக்கு இல்லாத போதிலும், தன்னுடைய தற்போதைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தவர் அஜீத்  என புகழாரம் சூட்டினார் ராகவா லாரன்ஸ்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!