---Advertisement---

கார் கொடுக்கிறதெல்லாம் கவர் பண்ணதுக்குத்தானாம்!…தன்னை நம்பாம இதெல்லாம் எதுக்கு பண்றீங்க..அதிரடி காட்டிய தயாரிப்பாளர்?…

Published on: May 19, 2024
kamal loakesh
---Advertisement---

ஒரு காலத்தில் படங்களின் வெற்றி விழா அதாவது சக்சஸ் மீட் எப்பொது நடத்தப்படும் என்றால் படம் ஐம்பது நாட்கள், நூறு நாட்கள் அதையும் தாண்டி ஓடும் போது தான். ஆனால் இப்போதெல்லாம் நான்காவது நாளே நடத்தப்படுகிறது. பாக்ஸ்-ஆபீஸால் வெற்றி என அறிவிக்கப்பட்டிருந்தால் கூட இதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் வசூலில் வாங்கிக்கட்டிய படங்கள் கூட வெற்றி பெற்றதாக சொல்லி அதனை கொண்டாடப்படுவதை என்னவென்று சொல்வது என சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியன்.

tirupur subramanian
tirupur subramaniam

அதோடு மட்டும் நிறுத்துகொள்ளாமல், சிலர் கார் பரிசெல்லாம் கொடுத்து வருகிறார்கள்.  இதை எல்லாம் என்னவென்று சொல்வது என தெரியவில்லை என்றும் அவர் சொலியிருக்கிறார். படத்தில் இணைந்ததற்கு தான் சம்பளம் கொடுத்து விடுகிறார்களே அதற்கு பிறகு எதற்கு இது போன்ற பரிசுகள். இதெல்லாம் கொடுப்பது அன்பினாலா? அல்லது அவர்களை கவர்ந்து தங்கள் சொல்லுக்கு கட்டுப்பட வைப்பதற்காவா? எனவும் கேட்டிருக்கிறார்.  ஹீரோக்கள் தங்களை வைத்து படம் எடுத்த இயக்குனர்களுக்கு பரிசளித்துள்ளதும் தமிழ் சினிமா கண்டுள்ள காட்சி தான்.

நீண்ட வருடங்களுக்கு முன்னர் “வாலி” படத்தில் நடித்த அஜீத் குமார், அதன் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இதே மாதிரி பரிசளித்திருந்தார். “மகாநடிகன்” படத்தில் சத்யராஜ் திருப்பூர் சுப்ரமணியன் சொன்னது போலவே ஒரு வசனத்தை பேசியிருந்தார். சமீபத்தில் “விக்ரம்” வெற்றியின் கொண்டாடும் விதமாக கமல்ஹாசன் “விக்ரம்” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கார் ஒன்றினை பரிசாக வழங்கியிருந்தார். முன்பு மாதிரி எல்லாம் இல்லை சினிமா இப்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்...வாங்கி கொட்டிக்கிட்ட தேனிசை தென்றல் தேவா?....

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional banner of the Tamil-Telugu multi-starrer movie Dharman featuring Rajinikanth and Ram Pothineni.

ரஜினியுடன் இணையும் வைப் ஹீரோ ராம் பொத்தினேனி! அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dialogue writer Dravid Selvam smiling during an interactive media session about the movie Scene.

சூர்யா படத்தின் விசில் பறக்கும் வசனங்கள்… கலக்கிய இளம் எழுத்தாளர்! ரசிகர்கள் பாராட்டு!

Official first look poster of the Tamil comedy film LoveBite featuring Santhanam and Aparna Das.

சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ்… மரண மாஸ் கூட்டணியில் வெளியானது ‘LoveBite’ ஃபர்ஸ்ட் லுக்!

Official first look poster of the Tamil fantasy comedy film Maragadha Naanayam 2.

மீண்டும் களமிறங்கும் சூப்பர் ஹிட் பேண்டஸி கூட்டணி! வெளியான ‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக்!

Promotional still of actor Dhanush and co-stars from the movie OM.

அண்டர்கவர் ஏஜெண்டாக தனுஷ், போலீஸாக சாய் பல்லவி! வெளியானது ‘OM’ படத்தின் அதிரடி கதைக்களம்!

Promotional poster of the Tamil movie Ameera featuring Seeman and RK Suresh.

கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் ‘அமீரா’… சீமான் மற்றும் சாட்டை-யின் மிரட்டலான டீசர் வெளியானது!